பாலசந்தர் இயக்கத்தில் எந்தவொரு படத்திலும் நடிக்காதது ஏன் என்ற ரசிகரின் கேள்விக்கு ராதிகா பதிலளித்துள்ளார்.
இந்திய திரையுலகில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் ராதிகா. பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் அறிமுகமாகி, முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
முன்னணி இயக்குநர்கள் அனைவருடைய இயக்கத்தில் நடித்துவிட்டாலும், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் கூட ராதிகா நடிக்கவில்லை. இது தொடர்பாக இன்று (மே 29) ராதிகாவின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு "கே பாலச்சந்தரை தவிர மற்ற பெரிய இயக்குநர்களுடனும் நீங்கள் நடித்துள்ளீர்கள்.
இந்த வெற்றிடத்தை நான் உணர்ந்தாலும், நீங்கள் சிறந்த நடிகைகளில் ஒருவர். இந்த ஆளுமை எந்த கதாபாத்திரத்துக்காகவாவது உங்களை அணுகினாரா? அல்லது அப்படி நடக்கவில்லையா? அந்த ஆளுமையைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்" என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக ராதிகா, "நாங்கள் சில முறை ஆலோசித்துள்ளோம். ஆனால் அவர் என்னிடமிருந்து அற்புதமான ஒன்றை எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை என்பதுதான் சோகம். எனக்கு அது மிகப்பெரிய வருத்தத்தை தந்தது" என்று பதிலளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago