'மாமனிதன்' வெளியீட்டில் தனக்கு அதிகாரமில்லை என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள படம் 'மாமனிதன்'. யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் காயத்ரி நாயகியாக நடித்துள்ளார்.
தென்காசி, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற ‘மாமனிதன்’ படப்பிடிப்பு, 2019-ம் ஆண்டு பிப்ரவரியுடன் முடிவடைந்தது. அதற்குப் பிறகு இந்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும், வெளியீடு குறித்து எந்தவொரு தகவலுமே வெளியாகவில்லை.
தற்போது 'மாமனிதன்' வெளியீடு தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
» இயக்குநர் மாரி செல்வராஜைப் பாராட்டிய நட்டி
» குறும்படத்துக்காக 'விடிவி 2' காட்சியைத் தேர்வு செய்தது ஏன்? - கெளதம் மேனன் விளக்கம்
"’மாமனிதன்’ திரைப்படத்தில் நான்கு பாடல்களும் மற்றும் பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகளையும் இசைஞானி இளையராஜா முடித்துவிட்டார். யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைப்பு செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள்தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை".
இவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago