தான் கண்ட ரஹ்மான் இசைக் கனவு குறித்து இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பகிர்ந்துள்ளார்.
மலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தமிழில் 'ஒரு பக்க கதை' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் கோவிந்த் வசந்தா. அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. அதற்குப் பிறகு '96' படத்தின் பாடல்களால் கொண்டாடப்பட்டவர் கோவிந்த் வசந்தா.
அதன் மூலம் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரத் தொடங்கினார். அதற்குப் பிறகு 'உறியடி 2', 'தம்பி', 'பொன்மகள் வந்தாள்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். தான் கண்ட கனவு குறித்து, தனது சமூக வலைதளத்திக் பதிவு செய்துள்ளார்.
அதில் கோவிந்த் வசந்தா கூறியிருப்பதாவது:
ரஹ்மான் அவர்கள் அவரது அடுத்த பாடலைப் பற்றி என்னிடம் அபிப்ராயம் கேட்கிறார். பாடலை ஒலிக்க வைக்கிறார். சில நொடிகள் தான் பாடல் ஓடுகிறது. நான் அதற்குள் ஆனந்தக் கண்ணீர் விட ஆரம்பித்தேன். என்ன ஒரு பாடல். குரல் ஆரம்பிக்கிறது. அட, நான் தான் பாடுகிறேன். நம்பவே முடியவில்லை. உடனே, கதவு அழைப்பு மணி அடித்தது. நான் விழித்துக் கொண்டேன். மன அழுத்தம். எனக்கு அந்தக் கனவு மீண்டும் வேண்டும்
இவ்வாறு கோவிந்த் வசந்தா தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவுக்கு பலரும், இந்தக் கனவு கூடிய விரைவில் நிறைவேறும் என்று பதிலளித்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago