பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
’அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். அதற்குப் பிறகு 'மெட்ராஸ்', 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். தற்போது ஆர்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் வடசென்னை பகுதியில் வசிக்கும் பாக்ஸர்களைப் பற்றிய கதையாகும்.
படம் இயக்குவது மட்டுமன்றி, 'நீலம் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் மூலம் குறும்படங்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றைத் தயாரித்தும் வருகிறார். இவருடைய தயாரிப்பில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும். அதனைத் தொடர்ந்து 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தைத் தயாரித்தார்.
தற்போது பெயரிடப்படாத புதிய படமொன்றை ரஞ்சித் தயாரித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய படத்தை ரஞ்சித் தயாரிக்கவுள்ளார். இதனை புதுமுக இயக்குநர் ஷான் என்பவர் இயக்கவுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை அனைத்துமே முடிவுக்கு வந்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் முடிந்து நிலைமை சீரானவுடன், பா.இரஞ்சித் - யோகி பாபு - ஷான் கூட்டணியின் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago