நடிகர் அப்பாஸ் இப்போது என்ன செய்கிறார்?

By செய்திப்பிரிவு

பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த அப்பாஸ், இப்போது தனது குடும்பத்தினருடன் நியூசிலாந்தில் செட்டிலாகி விட்டார்.

1996-ம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான 'காதல் தேசம்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் அப்பாஸ். அந்தப் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியால் அவருக்குத் தொடர் வாய்ப்புகள் வந்தன. அவருக்குப் பெண் ரசிகர்கள் அதிகரித்தனர்.

'விஐபி', 'மின்னலே', 'பூச்சூடவா', 'பூவேலி', 'படையப்பா', 'சுயம்வரம்', 'மலபார் போலீஸ்', 'திருட்டுப்பயலே' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட சில மொழிப் படங்களிலும் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் இவருக்குப் போதிய வாய்ப்புகள் வரவில்லை. இறுதியாக தமிழில் உருவான 'ராமானுஜன்' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு சில விளம்பரங்களில் நடித்திருந்தார்.

எந்தவொரு சமூக வலைதளத்திலும் அப்பாஸ் இல்லை. கடந்த மே 21-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இப்போது என்னதான் செய்கிறார் என்று விசாரித்த போது, அவர் இந்தியாவிலேயே இல்லை என்றார்கள்.

தனது மனைவி குழந்தைகளுடன் நியூசிலாந்தில் செட்டிலாகிவிட்டார் அப்பாஸ். அவருடைய மனைவி அங்கு முன்னணி ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். அப்பாஸும் முன்னணி நிறுவனத்தில் நல்ல சம்பளத்துக்குப் பணிபுரிந்து வருகிறார். மகன் ஏமான் மற்றும் மகள் எமிரா இருவரும் அங்கு படித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

31 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்