'இடம் பொருள் ஏவல்' வெளியீடு தொடர்பாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, நந்திதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'இடம் பொருள் ஏவல்'. லிங்குசாமி தயாரித்த இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார். 2014-ம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது.
2015-ம் ஆண்டு இந்தப் படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டது. அதற்குப் பிறகு லிங்குசாமிக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இந்தப் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கி படங்கள் வெளியாகி வந்தன.
இதனிடையே, தற்போது லிங்குசாமி தனது பைனான்ஸ் பிரச்சினையிலிருந்து மீண்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் நீண்ட நாட்களாக தயாரிப்பிலிருந்த 'நான் தான் சிவா' படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 'இடம் பொருள் ஏவல்' படத்தின் வெளியீடு குறித்து பேச்சுவார்த்தை துவங்கப்பட்டுள்ளது.
» சிவாஜிக்குப் பிறகு அசலான நடிகர் வடிவேலு தான்: வெற்றிமாறன்
» 'தசாவதாரம்' படத்துக்காக கமல் பட்ட கஷ்டங்கள்: சுவாரசியப் பின்னணி பகிரும் கே.எஸ்.ரவிகுமார்
கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் வெளியிடலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்த போது, பலரும் ஜூலை வெளியீடு எனத் தகவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் "எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து இயக்குநர் சீனுராமசாமி இயக்கிய 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது என்று சிலர் ட்விட்டரில் செய்தி பரப்பி வருவதாக தெரிகிறது.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் 'இடம் பொருள் ஏவல்' ரீலீஸ் தேதி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்து கொள்கிறோம். கரோனா தொற்று ஊரடங்கு முடிந்த பின்பு, எங்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுடன் கலந்து பேசி , எங்கள் திரைப்படத்திற்கு ஒரு நல்ல ரிலீஸ் தேதியை அறிவிப்போம். அதுவரை தவறான செய்திகளைப் பகிர வேண்டாம் என்று எங்கள் நிறுவனம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago