மாஸ்டர் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்து அர்ஜுன் தாஸ் பதிலளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. தமிழக அரசு இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், தற்போது 'மாஸ்டர்' பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியிடப்படும் என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்தனர்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் அர்ஜுன் தாஸ். மாஸ்டர் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அர்ஜுன் தாஸ் பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது:
மாஸ்டர் ட்ரெய்லரை ஆறு முறை பார்த்து விட்டேன். ட்ரெய்லர் மரண மாஸாக உள்ளது. தேதி முடிவுசெய்யப்பட்டது ட்ரெய்லர் வெளியிடப்படும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக சொல்லமுடியும்.
» 'மாஸ்டர்' விநியோகஸ்தருக்கு கைகொடுக்கும் விஜய்
» மிக்சர் சாப்பிடும் கதாபாத்திரம் உருவானதன் சுவாரசியப் பின்னணி: கே.எஸ்.ரவிகுமார் பகிர்வு
எப்போது ட்ரெய்லர் ரிலீஸ் ஆனாலும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். சரியான தருணத்தில் ட்ரெய்லரை தயாரிப்பாளர்கள் வெளியிடுவார்கள். அதில் வரும் ஒரு டயலாக் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும். எனவே ட்ரெய்லர் வெளியாகும்வரை காத்திருப்போம்.
இவ்வாறு அர்ஜுன் தாஸ் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
17 secs ago
சினிமா
27 mins ago
சினிமா
51 mins ago
சினிமா
46 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago