தனது போலி ட்விட்டர் தளத்தில், தனக்குத் தெரியாத அப்டேட் எல்லாம் வருவதாக தீனா தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தனது காமெடியின் மூலம் பிரபலமானவர் தீனா. இதனால் அவருக்குப் பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் வந்தன. முதலில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும், 'கைதி' படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ட்விட்டர் தளத்தில் இருந்தாலும், இவருடைய பெயரிலேயே போலி ட்விட்டர் கணக்கு இருக்கிறது.
இதில், 'மாஸ்டர்' படம் தொடர்பாக பல்வேறு ட்வீட்கள் வெளியாகின.
» காதலனைப் பிரிந்தாரா ப்ரியா பவானி சங்கர்?
» தொடரும் கிண்டல்? - இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறிய ப்ரியா பிரகாஷ் வாரியர்
இதனைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தீனா கூறியிருப்பதாவது:
"@dhina_vjtv இந்த ட்விட்டர் கணக்கு போலியானது. தயவுசெய்து ரிப்போர்ட் செய்யுங்கள். எனக்கே தெரியாத அப்டேட் எல்லாம் கொடுக்கிறாரு. போலிக் கணக்கு உருவாக்கி என்ன பயன் என்று தெரியவில்லை. ஒரிஜினல் கணக்கிற்கு 9 ஆயிரம் ஃபாலோயர்கள், போலி கணக்கிற்கு 17 ஆயிரம் ஃபாலோயர்கள்."
இவ்வாறு தீனா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago