மாட்டுத் தொழுவத்தில் மேக்கப் போட்ட விஜய் ஆண்டனி

By செய்திப்பிரிவு

'அக்னிச் சிறகுகள்' படத்தின் படப்பிடிப்பின் போது மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்து மேக்கப் போட்டுள்ளார் விஜய் ஆண்டனி.

தற்போது 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி. மேலும் பெயரிடப்படாத சில படங்களிலும் நடித்து வருகிறார். கரோனா அச்சுறுத்தலால் அவதிக்கு உள்ளாகியுள்ள தயாரிப்பாளர்களை கணக்கில் கொண்டு, நடிகர்களில் முதல் நபராக தனது சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதாக அறிவித்தார்.

விஜய் ஆண்டனியின் இந்த அறிவிப்புக்குத் தமிழ்த் திரையுலகினர் பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். ஹரிஷ் கல்யாண், மஹத், இயக்குநர் ஹரி, ஹார்த்தி உள்ளிட்டோரும் தங்களுடைய சம்பளத்தையும் குறைக்க முன்வந்துள்ளனர்.

இதனிடையே 'அக்னிச் சிறகுகள்' படத்தின் இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பதிவில் விஜய் ஆண்டனி குறித்து புகைப்படங்களுடன் கூறியிருப்பதாவது:

"சுவிட்சர்லாந்தில் மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்து மேக்கப் போட்டுக்கொள்ளும் மகத்தான மனிதர் தன் சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. சென்னையில் காரில் ஏசி போட்டுக் கொள்ளாதவர் ரஷ்யாவின் -20 டிகிரி குளிரை எங்களுக்காகத் தாங்கி நடித்ததுதான் பெரிய விஷயம்"

இவ்வாறு இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

சினிமா

9 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

மேலும்