சண்டைக் கலைஞர்கள் வீட்டிலிருந்தவாறு உருவாக்கியுள்ள சண்டைக்காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் மார்ச் 19-ம் தேதியிலிருந்து எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. சுமார் 52 நாட்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் பணிகளுக்கு மட்டுமே அனுமதியளித்து உள்ளது தமிழக அரசு. படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை.
இதனிடையே படப்பிடிப்பு இல்லாமல் அவதிப்பட்டு வந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் பெப்சி அமைப்பு உதவிகள் செய்துள்ளது. இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நிதியுதவியாகவும், பொருளுதவியாகவும் உதவி செய்துள்ளனர்.
தற்போது கரோனா ஊரடங்கில் சமூக இடைவெளி கடைப்பிடித்து பல்வேறு குறும்படங்கள் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துமே வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. இன்று (மே 13) காலை சண்டைக் கலைஞர்கள் உருவாக்கியுள்ள வீடியோ தான் சமூக வலைதள ட்ரெண்ட்டாக இருக்கிறது.
» ஊரடங்கு எதிரொலி: பெரிய பட்ஜெட் பாலிவுட் படங்கள் ஸ்ட்ரீமிங்கில் வெளியீடா?
» கரோனா நெருக்கடியிலும் விஜய் டிவியின் தாராள மனது: நெகிழும் தொடர் தயாரிப்பாளர்
என்னவென்றால், அனைவருமே வீட்டிலிருந்தவாறு படத்தின் சண்டைக் காட்சி போன்றே வடிவமைத்து படமாக்கியுள்ளனர். இதில் முக்கியமான சண்டைக் கலைஞர்கள் அனைவருமே நடித்துள்ளனர். இந்தப் படமாக்கல் முறை அனைவரையும் கவர்ந்துள்ளது. பலரும் இந்த வீடியோவுக்கு சண்டைக் கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்த வீடியோவைக் காண:
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
19 mins ago
சினிமா
25 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago