நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற ஸ்பானிஷ் தொடர் ‘மனி ஹெய்ஸ்ட்’. வங்கிக் கொள்ளை தொடர்பான கதைக்களம் கொண்ட இத்தொடரின் நான்காவது சீஸன் சமீபத்தில் வெளியானது. ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் 8 கொள்ளையர்களையும் அவர்களை வழிநடத்தும் ‘ப்ரொஃபஸர்’ ஒருவரையும் சுற்றி நடக்கும் கதை.
இத்தொடருக்கென்று உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் தொடர்களில் ‘மனி ஹெய்ஸ்டும்’ ஒன்று.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘மனி ஹெய்ஸ்ட்’ தொடரின் இந்திய உரிமையை நடிகர் ஷாரூக் கான் வாங்கியுள்ளதாகவும், அவரே ப்ரொஃபஸர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அது குறித்து எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் ஷாரூக் கான் தரப்பு வெளியிடவில்லை.
இந்நிலையில் ‘மனி ஹெய்ஸ்ட்’ தொடரின் இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ தனியார் தமிழ் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் மகேஷ்பாபு, ஷாரூக் கான், அஜித், விஜய், சூர்யா, ரன்வீர் ஆகிய நடிகர்களில் யார் ப்ரொஃபஸர் கதாபாத்திரத்துக்குச் சரியாக இருப்பார் என்ற கேள்விக்கு அலெக்ஸ் ரோட்ரிகோ, 'விஜய் சரியாக இருப்பார்' என்று பதிலளித்துள்ளார்.
» தமிழக அரசின் அனுமதிக்கு ஆர்.கே.செல்வமணி நன்றி: தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள்
» இறுதிக்கட்டப் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி: தயாரிப்பாளர்கள் நன்றி
அலெக்ஸ் ரோட்ரிகோவின் இந்த பதில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago