அஜித்- விஜய் வரும் தலைமுறைக்கும் மகிழ்விக்கும் நடிகர்கள்: தமன்னா

By செய்திப்பிரிவு

அஜித்தும் விஜய்யும் வரும் தலைமுறைக்கும் மகிழ்விக்கும் நடிகர்களாக இருப்பார்கள் என்று தமன்னா தெரிவித்துள்ளார்.

'கேடி' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் தமன்னா. அதனைத் தொடர்ந்து விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நாயகர்களின் படங்களில் நாயகியாக நடித்து முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வருபவர்கள் பட்டியலில் தமன்னாவுக்கு முக்கிய இடமுண்டு. இடையே சில இந்திப் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கரோனா அச்சுறுத்தலால் நேரலையில் தமன்னா அளித்துள்ள பேட்டியில் தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் குறித்துக் கூறியிருப்பதாவது:

"தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் நான் ஆச்சர்யப்படும் விஷயம், அவர்களைப் பொறுத்தவரை திரைப்படங்கள் அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கம் வகிக்கின்றன. அவர் அவர்களது கலாசாரத்தின் ஒரு பகுதியாக, அவர்களது வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒரு விஷயமாக சினிமா உள்ளது. 'வீரம்'தான் அஜித் சாருடன் எனக்கு முதல் படம். மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியாக அமைந்த படம் அது. அது ஒரு கமர்ஷியல் படமாக இருந்தாலும் ஒரு நடிகையாக எனக்கு நடிக்க அதிக சந்தர்ப்பங்களை வழங்கிய படம். எனக்குத் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம்.

விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். நம் தலைமுறை மட்டுமல்லாது இனி வரப்போகிற தலைமுறைகளையும் மகிழ்விக்கும் நடிகர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். இருவருக்குமே அற்புதமாம ரசிகர் கூட்டம் உள்ளது. தொடர்ந்து அந்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று நினைக்கிறேன்".

இவ்வாறு தமன்னா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

15 mins ago

சினிமா

47 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்