ஒவ்வொரு படமும் எனக்கு முதல் படம்தான்: இயக்குநர் மோகன் ராஜா நேர்காணல்

By கா.இசக்கி முத்து

‘தனி ஒருவன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா. படத்தின் வேலைகளில் பரபரப்பாக இருந்த அவரைச் சந்தித்தோம்.

“நான் இயக்கும் எந்தப் படத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். இயக்கும் ஒவ்வொரு படமும் எனக்கு முதல் படம் மாதிரிதான். அந்த அளவுக்கு கவனமாக இருப்பேன். அந்த வகையில் ‘தனி ஒருவன்’ படமும் எனக்கு முதல் படம்தான் என்று உற்சாகமாக பேசத் தொடங்கினார் மோகன் ராஜா.

‘வேலாயுதம்’ படத்துக்குப் பிறகு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?

‘வேலாயுதம்’ படத்துக்கு பிறகு நான் மிகவும் கடினமான கதையை எடுத்துக் கொண்டேன். அக்கதைக்கு நிறைய விஷயங்கள் தேவைப்பட்டன. அதனால் அதற்கான பணிகளில் ஈடுபட்டேன். பின்னர் அரவிந்த்சாமி சாரிடம் இக்கதையைச் சொன்னபோது, ‘எனக்கு 3 மாதம் அவகாசம் கொடுங்கள். இன்னும் உடம்பை ஃபிட்டாக்கி கொண்டு வருகிறேன்’ என்றார். இதெல்லாம்தான் இப்படத்தின் தாமதத்துக்கு காரணங்கள். சிறிது காலம் தாமதமானாலும் படம் நான் எதிர்பார்த்த அளவுக்கு திருப்திகரமாக வந்திருக்கிறது.

‘தனி ஒருவன்’ படத்தின் கதைக் களம் என்ன?

‘சந்தோஷ் சுப்ரமணியம்’ ஒரு குடும்பத்தின் அகத்துக்கான படமாக இருந்தது. அந்த வகையில் ‘தனி ஒருவன்’ புறத்துக்கான ஒரு படமாக இருக்கும். ‘வேலாயுதம்’ படத்தின் தொடர்ச்சியாக சமுதாயத்தின் மீதான இன்னொரு பார்வையாக ‘தனி ஒருவன்’ இருக்கும். “எதை வேண்டுமானாலும் சொல். ஆனால் மக்கள் ஏற்றுக் கொள்ளும் முறையில் சொல்” என்று என் குருநாதரான என் அப்பா அடிக்கடி சொல்லுவார். அவரது அந்த ஆலோசனையைத்தான் நான் எனது எல்லாப் படத்திலும் கடைப்பிடித்து வந்திருக்கிறேன்.

‘ரமணா’ இந்தி ரீமேக்கை நீங்கள்தான் இயக்குவதாக இருந்தது. பிறகு ஏன் விலகினீர்கள்?

நான் ‘ரமணா’ படத்தில் 6 மாதங்கள் பணியாற்றினேன். இயக்குவதற்கான முன் பணம்கூட எனக்குக் கொடுத்துவிட்டார்கள். ஆனால் கதை விவாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கதையில் எனக்கான மாற்றங்களை நான் விரும்பினேன், அதை தயாரிப்பு தரப்பு விரும்பவில்லை. அதனால் அப்படத்தில் இருந்து வெளியேறிவிட்டேன்.

இப்படத்தில் மீண்டும் உங்கள் தம்பியையே நடிக்க வைத்துவிட்டீர்களே?

போலீஸ் பாத்திரத்தில் நடிக்காத ஒரு இளமையான நாயகன் இப்படத்துக்கு தேவைப்பட்டார். நிறைய நடிகர்கள் போலீஸ் பாத்திரத்தில் நடித்துவிட்டார்கள். என் தம்பி இதுவரை போலீஸ் பாத்திரத்தில் நடிக்கவில்லை என்பதால் அவனிடம் சொன்னேன். நான் ஒரு வித்தியாசமான களத்தில் பயணிக்கும்போது, எனக்கு கதையே கேட்காத ஒரு நாயகன் தேவைப்பட்டார். அந்த வகையில் எனக்கு என் தம்பிதான் கிடைத்தான். என் தம்பியே நாயகன் என்பதால் மற்ற வேலைகளை நான் கவனமாக பார்த்துக் கொண்டேன். என்னுடைய சமுதாய பார்வையும் இப்படத்தில் இருக்கிறது.

வழக்கமாக ரீமேக் படங்களை பண்ணிக் கொண்டிருந்தவர் நீங்கள். முதன்முதலாக நேரடி கதையாக ‘தனி ஒருவன்’ கதையை பண்ண வேண்டியதன் அவசியம் என்ன?

நான் ரீமேக் படம் பண்ணவேண்டும் என்று பிறக்கவில்லையே. நீங்கள் பின்னோக்கி பார்க்கிறீர்கள், நான் முன்னோக்கி பார்க்கிறேன். நான் வந்தது நல்ல சினிமா பண்ணுவதற்கு அவ்வளவுதான். இன்றைய காலகட்டத்துக்கு இப்படத்தை ரீமேக் பண்ணினால் சரி என்று தோன்றும் படங்களைத்தான் பண்ணியிருக்கிறேன். ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ எல்லாமே நானே விரும்பி எடுத்துக் கொண்டதுதான்.

அருண் பாண்டியன் வீட்டு விழாவில் தான் முதல்முறையாக விஜய் சாரைப் பார்த்தேன். அதுவரை எங்களுக்குள் பழக்கமே கிடையாது. “எங்களுக்கெல்லாம் ஹிட் தர மாட்டீங்களா.. உங்க தம்பிக்கு மட்டும்தான் தருவீங்களா” என்று விஜய் சார் என்னிடம் கேட்டார். அவருக்காக பண்ணிய படம்தான் ‘வேலாயுதம்’. ‘தனி ஒருவன்’ படத்தின் கதை நான் ‘வேலாயுதம்’ படத்தை செய்யும்போதே தோன்றிவிட்டது. அப்போதே இக்கதையைத்தான் நாம் நேரடி கதையாக பண்ண வேண்டும் என நினைத்தேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

சினிமா

36 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்