கமலுடன் இணையும் விஜய் சேதுபதி?

By செய்திப்பிரிவு

'தலைவன் இருக்கின்றான்' படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கமல். இந்தப் படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தால், படப்பிடிப்பு தடைப்பட்டது. அதற்குப் பிறகு இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

'இந்தியன் 2' முடித்துவிட்டு 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் நடிக்கவுள்ளதாக கமல் அறிவித்துள்ளார். இந்தப் படத்தின் கதைகளம் 'தேவர் மகன்' படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதில் கமலுடன் நடிக்க வடிவேலு மட்டுமே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். இதனிடையே சமீபத்தில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் நேரலையில் உரையாடினார். இது பெரும் வரவேற்பு பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதற்காகவே கமல் - விஜய் சேதுபதி நேரலைக்கு 'தலைவன் இருக்கின்றான்' என்று பெயர் வைக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் செய்தி பெரும் வைரலாக பரவி வருகிறது.

இது தொடர்பாக கமல் தரப்பில் விசாரித்த போது, "இப்போதைக்கு 'இந்தியன் 2' படத்தில் மட்டும் தான் கமல் சார் கவனம் செலுத்தி வருகிறார். அந்தப் படத்தை முடித்துவிட்டுத் தான், அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்குவார். அது வரை வெளியாகும் அனைத்தும் செய்திகளும் யூகங்களே"

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

சினிமா

20 mins ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்