தமிழகத்தில் கரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் 279 பேர் உட்பட தமிழகம் முழுவதும் ஒரேநாளில் 508 பேர் கரோனா வைரஸால் பாதிக் கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் வைரஸ் தொற்றின் பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா சென்னையில் இருந்து தேனி சென்றதால் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்தவர். இவருக்கு தேனி என்ஆர்டி.நகரில் வீடு உள்ளது. ஓய்வு நேரங்களில் இங்கு வந்து தங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று (05.05.20) மாலை சென்னையில் இருந்து இவர் தேனி வந்தார்.
» விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக களமிறங்கிய தயாரிப்பாளர் சங்கம்
» ஊரடங்கு முடியும் வரை காத்திருங்கள்: தயாரிப்பாளர்களுக்கு மல்டிப்ளக்ஸ் சங்கம் கோரிக்கை
மாவட்ட எல்லையில் அவரை சுகாதாரத்துறையினர் சோதித்தனர். இதில் பாரதிராஜாவுக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் சிவப்பு மண்டலப்பகுதியில் இருந்து அவர் வந்ததால் வீட்டில் 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி தேனி நகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன்படி அவரது வீட்டில் இதற்கான தகவல் ஒட்டப்பட்டது.
முக்கிய செய்திகள்
சினிமா
21 mins ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago