அமேசான் தளத்தில் வெளியான 'படையப்பா': ரஜினியின் நடவடிக்கையால் உடனடி நீக்கம்

By செய்திப்பிரிவு

அமேசான் தளத்தில் 'படையப்பா' வெளியான தகவலைக் கேள்விப்பட்டு, ரஜினியின் நடவடிக்கையால் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா, லட்சுமி, செந்தில், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'படையப்பா'. அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ரஜினியே தயாரித்திருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும்.

தொலைக்காட்சிகளில் பலமுறை இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது. தற்போது கரோனா ஊரடங்கை கணக்கில் கொண்டு பல்வேறு படங்கள் டிஜிட்டல் தளங்களில் வெளியாகி வருகின்றன. இதைப் பயன்படுத்தி 'படையப்பா' படமும் சில நாட்களுக்கு முன்பு அமேசான் தளத்தில் வெளியாகியுள்ளது. பல்வேறு ரசிகர்கள் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளனர்.

இவ்வாறு வெளியாகியுள்ளது தொடர்பாக ரஜினிக்கு தகவல் தெரியவந்துள்ளது. உடனடியாக தனது அனுமதியில்லாமல் எப்படி வெளியானது என்று விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார். மேலும், இது தொடர்பான உரிமையை வைத்திருப்பவர்களிடம், "உங்களுக்கு அமேசான் உள்ளிட்ட தளங்களில் வெளியிட உரிமைக் கொடுக்கப்படவில்லை" என்று பேசி, நீக்கச் சொல்லியிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து அமேசான் தளத்திலிருந்து 'படையப்பா' படம் நீக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் நீக்கப்பட்டாலும், 'அண்ணாமலை' உள்ளிட்ட சில படங்கள் அமேசான் தளத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்