அஜித் பிறந்த நாள்: தமிழ்த் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

அஜித் பிறந்த நாளை முன்னிட்டு, தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்திற்கு இன்று (மே 1) பிறந்த நாள். அவர் இன்று தனது 49-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கரோனா அச்சுறுத்த்தலால் ட்விட்டர் தளத்தில் கூட எந்தவொரு கொண்டாட்டமும் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், ரசிகர்களோ தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து குவிந்து வருகிறது. இதனிடையே சில முன்னணி திரையுலக பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்தைத் தெரிவித்துள்ளனர். அவற்றின் தொகுப்பு:

குஷ்பு: பிறந்தநாள் வாழ்த்துகள் என் ஜார்ஜ் க்ளூனி. இன்றும், என்றும் உங்களுக்கு மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், செல்வம் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தனுஷ்: பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார்.

லாரன்ஸ்: அஜித் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு நல்ல ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்க ராகேவந்திர சுவாமியை வேண்டிக்கொள்கிறேன்.

சாந்தனு: தலைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மனிதர் மீது மகத்தான மரியாதை கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியான, நேர்மறையான வருடம் அவருக்கு அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். காமன் டிபியை (common dp) அன்று வெளியிட முடியாமல் போனதற்கு மன்னித்துவிடுங்கள் தல ரசிகர்களே. எனக்கு விருப்பம் இருந்தாலும் தலயின் வேண்டுகோளை மதிக்க வேண்டும். மே தின வாழ்த்துகள்.

பிரசன்னா: பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பான தல. என்னைப் போன்ற லட்சியவாதிக்கு, திரைப்பட பின்னணி இல்லாத ஒருவரால் போராடி, இந்தத் துறையில் ஜெயிக்க முடியும் என்பதற்கு நீங்கள்தான் மிகப்பெரிய உந்துதல். லவ் யூ தல.

இமான்: மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார். எளிமையின் மறு உருவம். உங்கள் நல் ஆரோக்கியத்துக்கு எனது பிரார்த்தனைகள் சார். உங்களது மனிதநேய நடவடிக்கைகள் நமது அன்னை பூமியில் இன்றும் என்றும் தொடர்ந்து மேலோங்கட்டும். ஆசீர்வதிக்கப்பட்டிருங்கள்.

பார்த்திபன்: இல்லத்தைப் பூமியிலும் உள்ளத்தை வானத்திலும் வைத்து வாழும் அபூர்வ நடிகர். மாற்று இல்லாத அல்டிமேட் ஸ்டார். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் திரு. அஜித். மே மாத கடவுளே தல தானே? ரசிகர்களுக்கு!!!

பாண்டிராஜ்: பிறந்தநாள் வாழ்த்துகள் சார். நீண்ட, ஆரோக்கியமான ஆயுளைத் தந்து கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.

ஹன்சிகா: பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார்.

மஞ்சிமா மோகன்: பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார்.

இயக்குநர் சிவா: சாய் சாய். #HBDDearestThalaAJITH. அஜித் சார் நேர்மையான, எளிமையான, ஊக்கம் தரும் ஒரு மனிதர். உங்கள் அன்புக்கும், ஊக்கத்துக்கும் நன்றி சார். உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், பெரிய மகிழ்ச்சி, மாபெரும் வெற்றியைத் தர வேண்டும் எனக் கடவுளை வேண்டிக் கொள்கிறேன். எப்போதும் போல என்றும் எங்களுக்கு ஊக்கம் தாருங்கள்.

சிபிராஜ்: அஜித் சாருக்கு மகிழ்ச்சியான பிறந்தநாளும், அற்புதமான வருடமும் அமைய வாழ்த்துகிறேன்.

ஹரிஷ் கல்யாண்: தல அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். திரையில் அவரது ஆளுமையின் மூலமாகவே ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் ஒரு மாஸ் நாயகன். எங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வதற்கு உந்துதலாக இருப்பவர். உங்களுக்கு எப்போதும் சிறப்பானவையே அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் சார்.

அனிருத்: பிறந்தநாள் வாழ்த்துகள் தல அஜித் சார்.

இயக்குநர் சேரன்: இன்று அஜித் அவர்களுக்கு பிறந்த நாள். முயற்சி, உழைப்பு இரண்டுமே அவரை இன்று உயரத்தில் வைத்திருக்கிறது.. அவருக்கு நான் சொல்லும் இந்த பிறந்தநாள் வாழ்த்து போய் சேரவாய்ப்பில்லை.. எனவே அவரை உச்சத்தில் வைத்து அழகு பார்க்கும் அவரின் ரசிகர்களுக்கு சொல்லி விடுவோம்

வெங்கட் பிரபு: என் இனிய தல, பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

அருண் விஜய்: பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

யுவன்: பிறந்தநாள் வாழ்த்துகள் சீஃப். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். கடின உழைப்பு என்றும் தோற்காது. தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் கொடுங்கள்.

சிவகார்த்திகேயன்: நம் அன்பான தல அஜித் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

ராதிகா: அற்புதமான மனிதருக்கு, அன்புக்குரிய அஜித், பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு மேன்மேலும் வெற்றி கிடைக்கட்டும்.

இயக்குநர் அறிவழகன்: இது எப்படி நடக்கிறது? மே தினமும், தல தினமும் ஒரே நாளில். இது, தொடர்ந்து கடினமாக உழைத்து, என்றும் மனமுடைந்து விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்கான அடையாளம். உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்வது எனக்கு மகிழ்ச்சி அஜித் சார். நீண்ட, ஆரோக்கியாமன் ஆயுள் உங்களுக்குக் கிடைக்கட்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்