'பொன்மகள் வந்தாள்' திரையரங்க வெளியீடு இல்லை: நேரடியாக அமேசானில் வெளியாகிறது

By செய்திப்பிரிவு

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் நேரடியாக அமேசானில் வெளியாகவுள்ளது.

புதுமுக இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. இதில் ஜோதிகா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பிரதான காட்சிகளைப் படமாக்கிவிட்டு, சென்னையில் க்ளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கி முடித்தது படக்குழு. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. ஆனால், கரோனா ஊரடங்கினால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

இதனிடையே, இந்தப் படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியிருந்ததால், திரையரங்கில் வெளியாகாது என்பது தெளிவாகியுள்ளது. தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்கள், நடிகை நடித்து நேரடியாக டிஜிட்டலில் வெளியாகும் முதல் படமாக 'பொன்மகள் வந்தாள்' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராகவும், ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்