ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பைக்கில் வந்த அஜித்: சுவாரஸ்யப் பின்னணி

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்தில் 'வலிமை' படப்பிடிப்பு முடிந்தவுடன், அங்கிருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்துள்ளார் அஜித். ஒரு மாதம் கழித்தே இந்தச் சம்பவம் தெரியவந்தது.

'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் 'வலிமை' படத்தில் நடிக்கத் தொடங்கினார் அஜித். போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சென்னையிலும் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கினார்கள். இதில் ஹைதராபாத் படப்பிடிப்பில் ஒரு சுவாரசியம் நடந்துள்ளது.

என்னவென்றால், அஜித் பைக் ஓட்டும் காட்சிகள் சிலவற்றைக் காட்சிப்படுத்தியுள்ளனர். அதன் இறுதி நாளில், காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிந்தவுடன் சென்னை திரும்ப வேண்டும். ஆனால், அஜித்தோ காட்சிகள் படமாக்கி முடிந்தவுடன், "நான் சென்னைக்கு இந்த பைக்கிலேயே செல்கிறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். அப்போது அவருடைய உதவியாளர்கள் அனைவரும் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், பேக்கிங் பண்ணிக் கொண்டு இருந்தனர்.

யாருமே இல்லாமல் செல்கிறாரே என்றவுடன், பலரும் கையில் பணம் இருக்கிறதா என்று கேட்டுள்ளனர். அதற்கு "அதெல்லாம் பெட்ரோல் போடும் அளவுக்கு இருக்கு" என்று சொல்லிவிட்டுக் கிளம்பி சென்னை வந்திருக்கிறார். இதை அறிந்த அவரது உதவியாளர்கள் பதறியடித்து, பின்னால் கிளம்பி வந்துள்ளனர். இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனாலும், இப்போதுதான் தெரியவந்தது.

அதேபோல், சில நாட்களுக்கு முன்பு 'வலிமை' படத்தில் அஜித்தின் பைக் இது தான் என்று விலையுயர்ந்த பைக் புகைப்படம் ஒன்று படப்பிடிப்புத் தளத்திலிருந்து பகிரப்பட்டது. இதை அஜித் ரசிகர்கள் 'படத்தில் தலைவனுக்கு வெளிநாட்டு பைக்' என்று கொண்டாடி மகிழ்ந்தார்கள். அது தவறான புகைப்படமாம்.

'வலிமை' படத்தில் நடிக்கும் துணை நடிகர்களில் ஒருவர் மிகப்பெரிய பணக்காரராம். தினமும் படப்பிடிப்புக்கு வெளிநாட்டுக் கார்களில் தான் வருவாராம். ஒரு நாள் தனது வெளிநாட்டு பைக்கில் படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார். அப்போது அங்குள்ளவர்கள் என்ன பைக் இது என்று கேட்டு, புகைப்படம் எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படத்தை வைத்துதான் பலரும் இது அஜித் ஓட்டும் பைக் என்று பகிர்ந்திருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்