விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு பேசி முடிவு செய்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய படம் கரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்து வெளியீட்டுக்குத் தயாராக வைத்துள்ளது படக்குழு.
கரோனா ஊரடங்கு அனைத்தும் முடிந்தவுடன், படத்தைத் தணிக்கைக்கும் விண்ணப்பிக்கவுள்ளார்கள். மே 3-ம் தேதி இந்த ஊரடங்கு முடிவுக்கு வரும் பட்சத்தில் உடனடியாக படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க 'மாஸ்டர்' படக்குழு முடிவு செய்துள்ளது.
ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினக் கொண்டாட்டமாக 'மாஸ்டர்' படத்தை வெளியிடலாம் என்று இப்போதைக்கு முடிவு செய்திருக்கிறார்கள். அதற்குள் அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து மக்கள் சகஜ நிலைக்குத் திரும்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த முடிவைப் படக்குழு எடுத்துள்ளது.
» ஊரடங்கை மதிக்காத கோமாளிகளால் நாம் நீண்ட காலம் வீட்டிலேயே இருக்க வேண்டியுள்ளது: சல்மான் கான்
» தனது உணவகத்தில் திரைத்துறை கலைஞர்களுக்கு இலவச உணவு: நடிகர் விக்னேஷ் அறிவிப்பு
அவ்வாறு சகஜ நிலைக்குத் திரும்பவில்லை என்றால், இன்னும் வெளியீட்டைத் தள்ளி வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தையும் போயிருக்கிறது. இப்போதைக்கு மே மாத இறுதிக்குள் அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். மேலும், மே மாதம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடந்து முடிந்துவிடும். ஆகையால் ஜூன் 22-ம் தேதி சரியான தேதியாக இருக்கும் என்று கருதியுள்ளது படக்குழு.
'மாஸ்டர்' படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், கெளரி கிஷன், வி.ஜே.ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லலித் கைப்பற்றியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago