அரசின் கட்டுப்பாடுகளைத் தவறாமல் கடைப்பிடித்துப் பாதுகாப்பாக இருங்கள்: ரஜினி

By செய்திப்பிரிவு

அரசின் கட்டுப்பாடுகளைத் தவறாமல் கடைப்பிடித்துப் பாதுகாப்பாக இருங்கள் என்று தமிழ்ப் புத்தாண்டுக்கு விடுத்த வாழ்த்துச் செய்தியில் ரஜினி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். மேலும், இன்று (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டாகும்.

இதற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உள்ளிட்ட அனைவருமே தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்ப் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்து ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் சிறிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

”இந்தப் புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும். இந்தத் துயரமான நேரத்தில் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்குச் சேவை செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளைத் தவறாமல் கடைப்பிடித்துப் பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து போகும்”.

இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

சினிமா

57 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

மேலும்