ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டிவிடுகிறது என்று தமிழக அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்
இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் உதவிகள் செய்து வருகிறார்கள். இந்த உதவிக்கு தமிழக அரசு இன்று (ஏப்ரல் 12) தடை விதித்தது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பிற அமைப்புகளைச் சார்ந்த அனைவரும், ஊரடங்கு அமலில் உள்ள இத்தருணத்தில் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வழங்கக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். தமிழக அரசின் இந்த முடிவு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
» நடிகர்களிடம் வந்த விமர்சனங்கள்: 'லொள்ளு சபா' இயக்குநர்
» மனைவியைப் பிரிந்ததற்கு ஜுவாலா கட்டா காரணமா? - விஷ்ணு விஷால் விளக்கம்
"அண்டை மாநிலங்கள் சில COVID19உடன் போராடத் தனியார், இளைஞர், ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டிவிடுகிறது. வேலை தெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்கள். தரகுக்கோ தள்ளுபடி செய்வதற்கோ இது நேரமல்ல. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்"
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago