தன்னார்வலர்கள் பொருட்கள் கொடுக்கத் தடை விதித்திருப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு லாரன்ஸ் யோசனையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் உதவிகள் செய்து வருகிறார்கள். இந்த உதவிக்கு தமிழக அரசு இன்று (ஏப்ரல் 12) தடை விதித்தது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பிற அமைப்புகளைச் சார்ந்த அனைவரும், ஊரடங்கு அமலில் உள்ள இத்தருணத்தில் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வழங்கக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். தற்போது தமிழக அரசின் தடை தொடர்பாக லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"கரோனா தடுப்பு நடவடிக்கையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான தமிழக அரசு மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்!
அதே சமயம், இந்த கரோனா ஊரடங்கினால் சரிவர உணவுப் பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு "இனி தன்னார்வலர்களோ, தனி நபர்களோ, உணவுப் பொருட்கள் எதையும் வழங்கக் கூடாது" என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை தயவுசெய்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஏனெனில்......
அரசாங்கமே கடைநிலை பகுதி வரை அனைவருக்கும் விரைவாக உணவுப் பொருட்களைத் தந்திட இயலாது என்பதே எதார்த்தம்
அவ்வகையில், ஏழை எளிய மக்களுக்கு உதவிட வேண்டும் எனும் நல்லெண்ணத்திலேயே, நான் கடந்த வாரம் கரோனா தடுப்பு நிவாரண நிதியை அளித்த கையோடு அடுத்த கட்டமாக வருகிற 14 ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு முதல் நானும் எனது நண்பர்களும், தமிழக அரசுடன் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் சில சேவை திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராகி வருகிறோம்.
இந்நிலையில் தான் நமது தமிழக அரசின் இந்த தடை உத்தரவு என் போன்ற தன்னார்வலர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. நமது அரசு வேண்டுமானால் இப்படிச் செய்யலாம், தன்னார்வலர்கள் மக்களுக்குப் பொருட்களை வழங்குகிற நடைமுறையில் இன்னும் கெடுபிடியான சட்ட நெறிமுறைகளை வகுத்து, அதனை காவல்துறையினரின் துணையோடு கடைப்பிடிக்குமாறு உத்தரவிடலாம்!
நம்மைப் பொறுத்தவரை, கரோனா நோய் தொற்று விஷயத்தில் தமிழக அரசு எடுத்து வருகிற அனைத்து நடவடிக்கைகளும் அருமை! அற்புதம்! அதை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்!
அதே நேரம்....
காய்கறி பழங்களை இலவசமாகக் கொடுக்கக் கூட மனமில்லாமல் குப்பையில் கொட்டுகிறவர்கள் இருக்கிற இதே நாட்டில்தான், அன்பை அளவில்லாமல் கொட்டுகிற தன்னார்வலர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
அதனால்.....
தன்னார்வலர்கள் நேரடியாக உதவக் கூடாது என்கிற உத்தரவை மட்டும் மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக முதல்வர் அவர்களை மிக பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
29 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago