அஜித் ஏன் வெளியே வருவதில்லை தெரியுமா?-அலிஷா அப்துல்லா தகவல்

By செய்திப்பிரிவு

அஜித் ஏன் வெளியே வருவதில்லை தெரியுமா என்று பழைய புகைப்படங்களை வெளியிட்டு அலிஷா அப்துல்லா ட்வீட் செய்துள்ளார்.

தமிழ்த் திரையுலக நடிகர்களில் தனது படத்தின் எந்தவொரு விழாவுக்கும் வருவதில்லை, தன் படத்தைப் பற்றித் தானே விளம்பரப்படுத்துவது இல்லை என்ற முடிவுடன் இருப்பவர் அஜித். இவரைக் காண வேண்டும் என்றால் திரையில் மட்டுமே காண முடியும்.

மேலும் படப்பிடிப்புத் தளங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் பார்க்கும்போது கூட ரசிகர்கள் மொய்த்துவிடுகிறார்கள். இதனால் தேவையின்றி அஜித் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை. படப்பிடிப்புக்கு மட்டுமே வெளியே வருகிறார்.

இதனிடையே, பிரபலமான பெண் ரேஸரான அலிஷா அப்துல்லா, அஜித் ஏன் வெளியே வருவதில்லை என்று இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு ட்வீட் செய்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் யாவும் அஜித் கார் ரேஸில் ஈடுபடும்போது எடுக்கப்பட்டவையாகும்.

அஜித் புகைப்படங்களை வெளியிட்டு அலிஷா அப்துல்லா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"மக்கள் அவரைத் தனியாக விடமாட்டார்கள் என்பதால்தான் அஜித் சார் வெளியே வருவதில்லை. இது ரேஸ் ட்ராக்கில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அவரை நடக்கக்கூட யாரும் விடவில்லை.

நமது தலயின் இன்னொரு புகைப்படம். அவரால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை. இதுதான் பந்தயத்தின் கடைசி நாள். இதனால்தான் அவர் வெளியே வர வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார்".

இவ்வாறு அலிஷா அப்துல்லா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

55 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்