தனது ட்விட்டர் பதிவில் புகைப்படம் ஒன்றின் மூலம், பிரதமர் மோடியின் பேச்சை 'தமிழ்ப்படம்' இயக்குநர் கிண்டல் செய்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்று (ஏப்ரல் 3) மாலை நிலவரப்படி 411 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே பிரதமர் மோடி இன்று (மார்ச் 3) காலை 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார். என்ன சொல்லப் போகிறார் என்று பலரும் ஆவலுடன் எதிர்நோக்கினார்கள். ஊரடங்கில் மக்களின் ஒற்றுமையைப் பாராட்டிய பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வேண்டுகோளுக்கு ட்விட்டர் தளத்தில் மீம்ஸ்களைக் கொட்டி வருகிறார்கள். எப்போதுமே கிண்டலாக தன் பதிவுகளை வெளியிடும் 'தமிழ்ப்படம்' இயக்குநர் அமுதன், பிரதமரின் பேச்சு முடிந்தவுடன் ஒரு புகைப்படத்தின் மூலம் தனது கிண்டலைப் பதிவு செய்துள்ளார்.
» ஏழைகள் பசியாற நிவாரண நிதி திரட்ட ஆரம்பித்த லியார்னடோ டி காப்ரியோ
» நமது நாகரிகத்தின் முக்கியமான சின்னம் ராமர்: கங்கணா ரணாவத்தின் ராம நவமி பகிர்வு
'வைதேதி காத்திருந்தாள்' படத்தில் கவுண்டமணி - செந்தில் இணையின் பிரபலமான பெட்ரோமாக்ஸ் லைட்டின் காமெடி புகைப்படத்தை மட்டும் இயக்குநர் அமுதன் பதிவிட்டு தனது பாணி கிண்டலை முடித்துக் கொண்டார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago