'மங்காத்தா' படத்தின் அஜித் டாலர் ரகசியம்: வாசுகி பாஸ்கர் பகிர்வு

By செய்திப்பிரிவு

'மங்காத்தா' படத்தின் அஜித் அணிந்திருந்த டாலர் ரகசியம் குறித்து வாசுகி பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, லட்சுமி ராய், பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மங்காத்தா'. பெரும் வரவேற்புப் பெற்ற இந்தப் படத்தை தயாநிதி அழகிரி தயாரித்திருந்தார். யுவன் இசையமைத்திருந்தார். அஜித் ரசிகர்கள் மத்தியில் 'மங்காத்தா' படத்துக்கு என்று ஒரு தனி இடமுண்டு.

இதனிடையே, இன்று (மார்ச் 30) கே டிவியில் 'மங்காத்தா' படம் ஒளிபரப்பட்டது. இதனை அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி, படக்குழுவினரும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இந்தப் படம் குறித்த தகவல்கள், பிடித்தக் காட்சிகள் என்று பலரும் பகிரவே #Mankatha என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட்டானது.

இந்தப் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த வாசுகி பாஸ்கர், இதில் அஜித் அணிந்திருக்கும் டாலர் குறித்த ஒரு சுவாரசியத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"இயக்குநர் நாயகன் அணியும் செயினுக்காக ஒரு டாலரைக் கேட்டார். அதை கழட்டித்தான் தீயில் வீசுவார் என்பதால் அதுதான் க்ளைமேக்ஸில் முக்கிய பங்காக இருக்கும். கை விலங்கு போன்ற டாலர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம் ஏனென்றால் அவர் காவல்துறை பொறுப்பிலிருந்து விடுபட்டிருப்பார். முதல் நாள் படப்பிடிப்பில் முதல் ஷாட் எடுப்பதற்கு முன்னால் தான் கை விலங்கு டாலர் என்பது உறுதி செய்யப்பட்டது"

இவ்வாறு வாசுகி பாஸ்கர் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்