கோ கரோனா கோ!- சிவாவின் கலகலப்பூட்டும் வீடியோ

By செய்திப்பிரிவு

கரோனா விழிப்புணர்வு தொடர்பாக சிவா தனது ட்விட்டர் பதிவில் கலகலப்பூட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனா வைரஸ் பரவும் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

இதனிடையே பொதுமக்களையும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு திரையுலகப் பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். எப்போதுமே காமெடி கலந்து பேசும் நடிகர் சிவா, கரோனாவுக்கு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ அவர் பேசியிருப்பதாவது:

"வணக்கம். ஏன், எதற்காக நாங்க அப்படி என்ன தப்பு பண்ணினோம். புரியுது, உனது எண்ணம் கேட்கிறது, யாரோ எங்கேயோ தப்பு பண்ணியதற்காக இப்படி எல்லாரையுமேவா, உலகம் ஃபுல்லாவா. போதும், நிறுத்திக் கொள்வோம். உன்னைப் பார்த்தால் டீசன்டாக தெரியுது. உன்கிட்ட ஒரு க்யூட்னஸ் இருக்கு.

சரி. நாங்கள் இனிமேல் வீட்டிலேயே இருப்போம். தேவையில்லாமல் ஸ்டைலாக ஊர் சுற்ற மாட்டோம். முக்கியமாகச் சுற்ற மாட்டோம். இறுதியாக, இந்த உலகத்தில் உண்மையான அன்பு மட்டும்தான் எப்போதுமே காப்பாற்றும். நாங்கள் எல்லாம் அன்பாக ஒன்றாக இருப்போம். தயவுசெய்து நீ வந்த வேகத்திலேயே போயிடு. தயவுசெய்து போயிடு...

(என்றவுடன், அவர் பேசியது அனைத்துமே கனவில் பேசியிருக்கிறார். இப்போது கட்டிலில் தூங்கிக் கொண்டே..)

தயவுசெய்து போயிடு, எவ்வளவு மருத்துவர்கள், எவ்வளவு மருத்துவ ஊழியர்கள், அரசாங்க அதிகாரிகள், காவல்துறையினர் இரவு பகலாகப் பணிபுரிகிறார்கள். ப்ளீஸ் கோ கரோனா, கோ கரோனா...

(இவ்வாறு சொல்லிக் கொண்டே இருக்கும்போதே.. ஒரு பெண் குரல் கேட்கிறது. உடனே சிவாவும் கண்விழித்து விடுகிறார். பெண் குரல்..)

டேய்.. சிவா எழுந்தாச்சா.. யார் கூட பேசிக்கிட்டு இருக்க.. குப்பை போட வேண்டும், வீடு கூட்ட வேண்டும், பாத்திரங்கள் எல்லாம் அப்படியே இருக்கு பாரு.. சீக்கிரம் சீக்கிரம்... (என்றவுடன் சிவா மீண்டும் போர்வையால் இழுத்து மூடிக் கொள்கிறார்)''.

இவ்வாறு சிவாவின் வீடியோ பதிவு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்