துரதிர்ஷ்டவசமாக ’ஆரண்ய காண்டம்’ படத்தைப் பலர் பார்க்கவில்லை என்று இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தெரிவித்துள்ளார்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்ட இந்தப் படம் வெளியாகி இன்றுடன் (மார்ச் 29) ஓராண்டு ஆகிறது. இந்தப் படம் தொடர்பாக இப்போது வரை யாரேனும் ஒருவர் சமூ கவலைதளத்தில் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே ஓராண்டை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் தியாகராஜா. அதில், 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் வெளியாகி ஓராண்டு ஆகியிருப்பது குறித்து, "அந்தப் படம் வெளியானதுமே அதற்கும் எனக்குமான சம்பந்தம் முடிந்துவிட்டது. ஆனால் இப்போதும் படத்தைப் பார்ப்பவர்கள் அவ்வப்போது எனக்கு அவர்களின் கருத்துகளைச் சொல்வார்கள். அது எனக்குப் படப்பிடிப்பு நாட்களை ஞாபகப்படுத்தும். ஒரு வகையில் எனக்கே கூட ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. எவ்வளவு வேகமாக நாட்கள் கடந்துவிட்டன என்று யோசிக்கிறேன்" என்று பதிலளித்துள்ளார் தியாகராஜன் குமாராஜா.
மேலும், 'ஆரண்ய காண்டம்', 'சூப்பர் டீலக்ஸ்' ஆகிய படங்களில் எது சிறந்தது என்று பலரும் பேசி வருவது குறித்து தியாகராஜன் குமாரராஜா பேசுகையில், "’சூப்பர் டீலக்ஸ்’ எடுக்கும்போதும் சரி, ’ஆரண்ய காண்டம்’ எடுக்கும்போதும் சரி, மக்கள் விரும்பிப் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில தான் எடுத்தேன். மக்களுக்குப் புரியும் என்று நினைத்தேன்.
» இரண்டாம் முறையும் அசத்திய தியாகராஜன் குமாரராஜா: இன்று ‘சூப்பர் டீலக்ஸ்’ வெளியான நாள்
» அதிகமான தொகைக்குச் சம்மதமா? - அக்ஷய் குமாரின் பதிலால் பெருமைப்பட்ட மனைவி
துரதிர்ஷ்டவசமாக ’ஆரண்ய காண்டம்’ படத்தைப் பலர் பார்க்கவில்லை. பார்க்காமலேயே நல்ல படமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறார்கள். சிலர் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை விட 'ஆரண்ய காண்டம்' நன்றாக இருந்தது என்றார்கள். எனக்குத் தனிப்பட்ட முறையில் 'சூப்பர் டீலக்ஸ்' பிடித்தது. ஏனென்றால் 'ஆரண்ய காண்டம்' எடுத்த காலகட்டத்தை விட இந்தப் படம் எடுக்கும்போது சற்று தேர்ந்திருந்தேன். இந்த இரண்டு படங்களை அலச இன்னும்கூட சில காலம் ஆகும் என நினைக்கிறேன். எனக்கு இரண்டு படமும் பொதுதான்” என்றார் தியாகராஜன் குமாராஜா.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago