பொதுமக்கள் பொறுப்போடு இருக்கவேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.=
கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை கரோனா வைரஸுக்கு 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், திரையுலகப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.
பொதுமக்களும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு திரையுலகப் பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்
இதுகுறித்து அவர் இன்று (29.03.20) தனது ட்விட்டர் பக்கத்தில், ''வைரஸ் தானாகப் பரவவில்லை. பொதுமக்களாகிய நாம்தான் அதைப் பரப்புகிறோம். வீட்டிலேயே இருங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவுங்கள். பொறுப்போடு இருங்கள். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். என் மகனோடு நேரத்தைச் செலவிடுகிறேன். அவர்களின் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள்'' என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
» கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஆதரவற்றோர் இல்லமாக மாறிய கேன்ஸ் திரை விழா அரங்கம்
» நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்
தன் மகனுக்கு தேசிய கீதத்தைக் கற்றுக் கொடுக்கும் வீடியோ ஒன்றையும் பிரகாஷ்ராஜ் பகிர்ந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago