வீடியோ காலில் 'மாஸ்டர்' படக்குழு

By செய்திப்பிரிவு

கரோனா அச்சத்தால் சமூக விலகலைக் கடைப்பிடிக்க 'மாஸ்டர்' படக்குழுவினர் வீடியோ கால் மூலமாகப் பேசியுள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 694 ஆக உயர்ந்துள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கரோனா வைரஸ் பரவைத் தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி. இதனால் மக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

படப்பிடிப்புகள், இறுதிக்கட்டப் பணிகள் அனைத்துமே நிறுத்தப்பட்டு இருப்பதால் திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர். மேலும், ஏப்ரல் 9-ம் தேதி வெளியாவதாக இருந்த 'மாஸ்டர்' படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் நடித்துள்ள விஜய், மாளவிகா மோகனன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோர் வீடியோ கால் மூலம் பேசினர்.

இதனைப் புகைப்படமாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மாளவிகா மோகனன். அதனுடன் வெளியிட்டுள்ள பதிவில், "பிரச்சினைகள் வரும் போகும். கொஞ்சம் சில் பண்ணு மாப்பி. வெளியே செல்லவே முடியாதபோது எப்படி வெளியே செல்வது. 'மாஸ்டர்' படக்குழு சமூக விலகலைக் கடைப்பிடிக்கிறது. நீங்கள்?" என்று கேட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்