வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா

By செய்திப்பிரிவு

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஆண்ட்ரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'வடசென்னை' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆண்ட்ரியா. அதன் 2-ம் பாகம் இன்னும் உருவாகவில்லை. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.

தற்போது சூரி படத்தின் பணிகளையும், சூர்யா நடிக்கவுள்ள படத்தின் பணிகளையும் கவனித்து வருகிறார். இதற்கிடையே புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்கவுள்ள புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளார். இதில் ஆண்ட்ரியா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

‘வடசென்னை’ படத்தின்போது வெற்றிமாறன் - ஆண்ட்ரியா இடையே ஏற்பட்ட நட்பால் இப்படத்தைத் தயாரித்துக் கொடுக்க வெற்றிமாறன் ஒப்புக்கொண்டுள்ளார். ஏப்ரலில் படப்பிடிப்புக்குச் செல்ல படக்குழு ஆயத்தமானது. தற்போது கரோனா அச்சத்தால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தில் நடித்த விஜி சந்திரசேகர் மகள் லவ்லின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்