பேச்சுவார்த்தையில் 'வேட்டையாடு விளையாடு 2'?

By செய்திப்பிரிவு

'வேட்டையாடு விளையாடு' படத்தின் 2-ம் பாகத்துக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில், 2006-ம் ஆண்டு வெளியான படம் 'வேட்டையாடு விளையாடு'. மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில் உருவான இந்தப் படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்திருந்தனர்.

இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் பாடல்களும் இசை விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு பிறகு மீண்டும் கமல் - கௌதம் மேனன் இணைப்புக்குப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், எதுவுமே இறுதிக்கட்டத்தை எட்டவில்லை.

ஆனால், சமீபமாக கமல் - கௌதம் மேனன் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். அதில் 'வேட்டையாடு விளையாடு 2' பண்ணலாமா என்று பேச்சுவார்த்தை போயிருக்கிறது. தற்போது வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 'ஜோஷ்வா' படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார். அந்தப் படம் முடிந்தவுடன் மீண்டும் வேல்ஸ் நிறுவனத்துக்கே படம் பண்ணவுள்ளார். 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் வெளியீட்டுக்கு உதவியிருப்பதால் தொடர்ச்சியாக 3 படங்களை வரை அந்நிறுவனத்துக்கே கௌதம் மேனன் இயக்கவுள்ளார்.

'வேட்டையாடு விளையாடு 2' படம் குறித்த பேச்சுவார்த்தையில் வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷும் கலந்து கொண்டுள்ளார். இதனால், இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என்கிறார்கள் நெருக்கமானவர்கள். 'ஜோஷ்வா' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கமல் - கௌதம் மேனன் கூட்டணி குறித்து அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்