’தளபதி 65’ இயக்குநர் நானா? - 'கோப்ரா' இயக்குநர் மறுப்பு

By செய்திப்பிரிவு

'தளபதி 65' இயக்குநர் தொடர்பான விக்கிபீடியா பேஜ் மாற்றத்தில் உண்மையில்லை என்று 'கோப்ரா' இயக்குநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. இந்தப் படம் விஜய் நடிப்பில் வெளியாகும் 64-வது படமாகும். இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 65-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

'தளபதி 65' என்று அழைக்கப்பட்டு வரும் இந்தப் படத்துக்காக பல்வேறு இயக்குநர்களிடம் விஜய் கதைகள் கேட்டார். சுதா கொங்கரா கூறிய கதை அவருக்கு மிகவும் பிடிக்கவே, உடனே தொடங்கலாம் என்று தெரிவித்தார். ஆனால், நவம்பரில்தான் படப்பிடிப்பு நடத்த முடியும் என சுதா கொங்கரா கூறியதால் அந்தப் படத்தைத் தனது 66-வது படமாகத் தேர்வு செய்வார் எனத் தெரிகிறது.

இதனிடையே, விக்கிபீடியா பக்கத்தில் யார் வேண்டுமானாலும் யாருடைய பக்கத்தின் தகவல்களைக் கூட மாற்றிவிட முடியும். இந்த மாதிரி மாற்றியது கூட பல முறை சர்ச்சையாகியுள்ளது. இந்த முறை விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'கோப்ரா' படத்தின் இயக்குநரான அஜய ஞானமுத்து பக்கத்தின் தகவல்களை மாற்றிவிட்டார்கள்.

'கோப்ரா' படத்தைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள 'தளபதி 65' படத்தை இயக்கவுள்ளதாக அஜய் ஞானமுத்துவின் விக்கிபீடியா பக்கத்தை மாற்றிவிட்டார்கள். இது தொடர்பாக அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பதிவில் "இல்லை. இது யார் பாத்த வேலைனு தெரியல" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்