பிரபுதேவா நடித்து வரும் 'பஹீரா' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் 'கின்னஸ்' பக்ரூ நடித்து வருகிறார்.
'தபங் 3' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் சல்மான் கான் நடிப்பில் உருவாகும் 'ராதே' படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா. அந்தப் படத்தின் பணிகளுக்கு இடையே, தமிழில் தனது படத்தில் உருவாகும் 'பஹீரா' படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு நாயகியாக அமைரா நடித்து வருகிறார்.
தற்போது 'பஹீரா' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருவதை 'கின்னஸ்' பக்ரூ தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார். தமிழில் சசி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற 'டிஷ்யூம்' படத்தில் நடித்திருந்தார் 'கின்னஸ்' பக்ரூ. அதனைத் தொடர்ந்து 'காவலன்',' ஏழாம் அறிவு' உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருந்தாலும், முழுக்க மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
2 அடி 6 அங்குல உயரம் இருக்கும் பக்ரூ, உலகிலேயே ஒரு திரைப்படத்தில் நாயகன் கதாபாத்திரத்தில் நடித்த உயரம் குறைவான நடிகர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். இதனால்தான் இவரது பெயர் 'கின்னஸ்' பக்ரூ என்று மாறியது. தற்போது திரைப்படங்களோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்களிலும் பக்ரூ தோன்றுகிறார்.
'பஹீரா' படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த் திரையுலகிற்குத் திரும்பியுள்ளார் 'கின்னஸ்' பக்ரூ. பரதன் பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago