புதுமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கவுள்ள படத்தில் அப்பா பாக்யராஜுடன் இணைந்து நடிக்கவுள்ளார் சாந்தனு.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’மாஸ்டர்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாந்தனு. அதனைத் தொடர்ந்து விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகும் 'ராவணக் கோட்டம்' படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.
இதனிடையே, புதுமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கவுள்ள படத்தில் அப்பா பாக்யராஜுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை நடந்து முடிந்து, படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதில் அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். புதுமணத் தம்பதியரின் முதல் இரவில் நடைபெறும் பாரம்பரிய நிகழ்வுகளை நகைச்சுவையாக விரசமில்லாமல் திரைக்கதையாக எழுதியுள்ளார் ஸ்ரீஜர். ரவீந்தர் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளனர்.
» வைரஸ் பரவாமல் இருக்க தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்: டாம் ஹாங்க்ஸ்
» கோவிட் -19 அச்சுறுத்தல்: ஒரு வருடம் தள்ளிப்போன ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9’ வெளியீடு
ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்ரவர்த்தி, எடிட்டராக ஜோமின் மேத்யூ, கலை இயக்குநராக நர்மதா வேணி, இசையமைப்பாளராக தரண் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
43 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago