நீங்கள் தயார் என்றால் நாங்களும் தயார்: மிஷ்கினுக்கு வேல்ஸ் நிறுவனம் ஆதரவுக் குரல்

By செய்திப்பிரிவு

நீங்கள் தயார் என்றால் நாங்களும் தயார் என்று இயக்குநர் மிஷ்கினுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது வேல்ஸ் நிறுவனம்.

’துப்பறிவாளன் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு, வரவேற்பு பெற்றுள்ளது. பலரும் இயக்குநராகியுள்ள விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு விஷால் - மிஷ்கின் இருவருக்கும் இடையேயான மோதலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

விஷால் தயாரிப்பு நிறுவனத்துக்கு இயக்குநர் மிஷ்கின் 15 நிபந்தனைகள் விதித்து எழுதிய கடிதம், மற்றும் மிஷ்கினை மறைமுகமாகச் சாடி விஷால் வெளியிட்ட அறிக்கை ஆகியவை மிஷ்கினுக்கு எதிராக பெரும் சர்ச்சையை உருவாக்கின. அனைத்துக்குமே மிகவும் அமைதியாகவே இருந்து வந்தார் மிஷ்கின்.

நேற்று (மார்ச் 12) மாலை நடைபெற்ற 'கண்ணாமூச்சி' வெப் சீரிஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் மிஷ்கின். அங்கு பேசும்போது விஷாலை கடுமையாக விமர்சித்தார். தனது தரப்பு நியாயங்கள், 'துப்பறிவாளன் 2' படத்தில் என்ன நடந்தது உள்ளிட்டவற்றையும் மிஷ்கின் எடுத்துரைத்தார்.

மிஷ்கினின் இந்தப் பேச்சு பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மிஷ்கினின் பேச்சை மையப்படுத்தி வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில், "மிஷ்கின் சார், உங்கள் மீதும் உங்களுடைய கதையின் மீதும் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உள்ளது. நீங்கள் தயார் என்றால் வேல்ஸ் நிறுவனமும் தயார்" என்று தெரிவித்துள்ளது. இந்தப் பதிவுடன் 'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது.

வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை ஐசரி கணேஷ் நடத்தி வருகிறார். இவர் நடிகர் சங்கத்தில் விஷாலுக்கு எதிராகக் களமிறங்கி பணிபுரிந்து வருகிறார். விஷாலுக்கு எதிராக மிஷ்கின் திரும்பியுள்ளதால், அவருக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளார் ஐசரி கணேஷ். நடிகர் சங்கக் கட்டிடத்துக்காக விஷால் - கார்த்தி நடிக்க ஐசரி கணேஷ் தயாரிப்பில் தொடங்கிய படம் 'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா'. தயாரிப்பில் ஏற்பட்ட சிக்கலால் அந்தப் படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்