'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்த லோகேஷ் பாபுவின் மருத்துவச் செலவுக்கு நிதியுதவி வழங்கினார் விஜய் சேதுபதி.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'நானும் ரவுடிதான்'. இந்தப் படத்தின் காமெடிக் காட்சி ஒன்றில் நடித்தவர் லோகேஷ் பாபு. இந்தப் படம் மட்டுமன்றி, சில படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
மேலும், ஆதித்யா சேனலில் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார் லோகேஷ் பாபு. சில நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல்நிலை மிகவும் பாதித்தது. இவரது மருத்துவச் செலவுக்கு நிதியுதவி தேவை என்று சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவின.
இதனைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி லோகேஷ் பாபுவை நேரில் சந்தித்து அவரது மருத்துவச் செலவுக்கு நிதியுதவி வழங்கினார். மேலும், சில மணித்துளிகள் அவரிடம் நலம் விசாரித்துப் பேசிக் கொண்டிருந்தார். விஜய் சேதுபதியின் இந்த உதவிக்கு, லோகேஷ் பாபுவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
» அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது: விஷால் அணியினர் மீது ஐசரி கணேஷ் காட்டம்
» ட்விட்டரில் களைகட்டும் திரை விமர்சன விவாதங்கள்: இயக்குநர்கள் உணர வேண்டியது என்ன?
முக்கிய செய்திகள்
சினிமா
51 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago