நீ இல்லாத வாழ்க்கையைக் கற்பனை செய்ய முடியாது: ஆர்யா குறித்து சயிஷா ட்வீட்

By செய்திப்பிரிவு

நீ இல்லாத வாழ்க்கையைக் கற்பனை செய்ய முடியாது என்று ஆர்யா குறித்து சயிஷா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

'கஜினிகாந்த்' படத்தில் இணைந்து நடித்தபோது ஆர்யா - சயிஷா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களது திருமணம் 2019-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி நடைபெற்றது. அதில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இன்று (மார்ச் 10) ஆர்யா - சயிஷா தம்பதியினர் தங்களது முதலாமாண்டு திருமண நாளைக் கொண்டாடி வருகிறார்கள். இதனை முன்னிட்டு இருவரும் இணைந்து நடித்துள்ள 'டெடி' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, 'டெடி' இயக்குநர் சக்தி செளந்தர் ராஜனுக்கும் இன்று பிறந்த நாள்.

திருமண நாளை முன்னிட்டு ஆர்யா - சயிஷா தம்பதியினருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆர்யா குறித்து சயிஷா தனது ட்விட்டர் பதிவில், "என்னை எல்லா விதங்களிலும் முழுமையாக்கும் மனிதனுக்குத் திருமண நாள் வாழ்த்துகள். நீ இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்ய முடியாது. அன்பு, உற்சாகம், நிலைத்தன்மை, தோழமை எல்லாம் ஒரே நேரத்தில். நான் உன்னை இப்போதும், எப்போதும் விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அவரது ட்வீட்டைக் குறிப்பிட்டு ஆர்யா தனது ட்விட்டர் பதிவில், "எப்போதும் என்பது நெடுங்காலம். ஆனால் அதை உன்னுடன் செலவிடுவதில் தயக்கம் இல்லை. நான் நானாக இருக்கக் காரணம் நீ. உன்னை அதிகம் நேசிக்கிறேன். நீ நீயாக இருப்பதற்கு நன்றி. திருமண நாள் வாழ்த்துகள்" என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்