'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திலிருந்து சமந்தா விலகிவிட்டார் என்று வெளியான தகவலுக்குப் படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.
'நானும் ரவுடிதான்' படக்குழுவினரான விக்னேஷ் சிவன் - விஜய் சேதுபதி - நயன்தாரா மூவரும் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளனர். 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சமந்தாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். லலித் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இதனிடையே நேற்று (பிப்ரவரி 6) மாலை முதல் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திலிருந்து சமந்தா விலகிவிட்டதாகத் தகவல் வெளியானது. மேலும், சமந்தா கர்ப்பமாகி இருப்பதுதான் காரணம் என்றும் சிலர் செய்திகளை வெளியிட்டனர். தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இணையதளங்கள் அனைத்திலுமே சமந்தா கர்ப்பம் என்று செய்திகள் வெளியாகின.
இதற்கு சமந்தா பதிலளிக்கவே இல்லை. அதற்குப் பதிலடியாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மீண்டும் ஜிம்மில் இருக்கிறேன் என்று வெயிட் தூக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டார். இதன் மூலம் அவர் கர்ப்பமாக இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
மேலும், சமந்தா விலகியுள்ளாரா என்று 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படக்குழுவினரிடம் விசாரித்தபோது, அவர்களும் இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்தனர். படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago