தனது அடுத்த படம் 'புதுப்பேட்டை 2'தான் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'புதுப்பேட்டை'. 2006-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இந்தப் படத்துக்காக யுவன் உருவாக்கிய பாடல்கள் இப்போது வரை கொண்டாடப்பட்டு வருகின்றனது. இந்தப் படத்தின் 2-ம் பாகம் குறித்த கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், 'என்.ஜி.கே' படத்தைத் தொடர்ந்து தாணு தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் செல்வராகவன்.
அதில் தனுஷ் நாயகனாக நடிக்கச் சம்மதம் தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் தனுஷை இயக்கவுள்ள படம் 'புதுப்பேட்டை 2'தான் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, இதனை செல்வராகவன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த அறிவிப்பால், தனுஷ்- செல்வராகவன் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாகியுள்ளனர்.
’அத்ரங்கி ரே’, 'கர்ணன்', 'கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படம்' ஆகியவற்றைத் தொடர்ந்து, செல்வராகவன் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago