சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு?

By செய்திப்பிரிவு

சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்துக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

'இறுதிச்சுற்று' படத்துக்குப் பிறகு சூர்யா நடிப்பில் உருவாகும் 'சூரரைப் போற்று' படத்தை இயக்கியுள்ளார் சுதா கொங்கரா. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 30-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை இயக்குவார் சுதா கொங்கரா என்று தகவல்கள் வெளியானது. ஆனால், அந்தப் படத்தை விஜய் ஜூலை மாதமே தொடங்க வேண்டும் என விரும்புவதால் இந்தக் கூட்டணி இப்போதைக்குச் சாத்தியமில்லை எனத் தெரிகிறது.

இந்தத் தகவல்கள் உலவி வந்து கொண்டிருந்த வேளையில், சிம்பு நடிக்கும் படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும், யுவன் தயாரிக்கவுள்ளதாகவும் புதிதாக ஒரு செய்தி வெளியானது. இது தொடர்பாக விசாரித்த போது, "சிம்பு படத்தை இயக்க சுதா கொங்கராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது உண்மை தான்.

அதற்கான முயற்சியில் யுவன் தான் இறங்கிப் பேசினார். அந்தப் படம் கண்டிப்பாக நடக்கும். ஆனால், இப்போதைக்கு இருக்காது" என்று தெரிவித்தார்கள். இந்த தகவலின்படி 'சூரரைப் போற்று' முடித்தவுடன் ஒரு படத்தை இயக்கிவிட்டு, அடுத்ததாக உருவாகவுள்ள படத்தில் சிம்புவை இயக்குவார் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்