டிகே இயக்கத்தில் உருவாகி, நீண்ட நாட்களாகத் தயாரிப்பிலிருந்த 'காட்டேரி' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டிகே இயக்கத்தில் உருவான படம் 'காட்டேரி’. ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா ஆகியோருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளும் முடிவடைந்துவிட்டன. ஆனால் பல்வேறு படங்கள் தயாரிப்பால் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம். இதனால் 'காட்டேரி' படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது பைனான்ஸ் பிரச்சினை அனைத்தையும் தீர்த்துவிட்டார் ஞானவேல்ராஜ். இதனால் 'அருவா' படத்தையும் அறிவித்துள்ளார். இந்தத் தீர்வால் 'காட்டேரி' படம் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, ஏப்ரல் 17-ம் தேதி 'காட்டேரி' படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் புதிதாக ட்ரெய்லர் ஒன்றையும் வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
32 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago