மார்ச் 6-ம் தேதி வெளியாக இருந்த 'வால்டர்' திரைப்படம் அடுத்த வாரம் (மார்ச் 13-ம் தேதி) வெளியாகிறது.
புதுமுக இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வால்டர்’. இதன் படப்பிடிப்பு கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கப்பட்டது. இதனை 11:11 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
முழுக்க முழுக்க காவல்துறையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, நட்டி, சனம் ஷெட்டி, சார்லி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து படத்தை தணிக்கைக்கு அனுப்பியது படக்குழு. தணிக்கை அதிகாரிகள் யு சான்றிதழ் அளித்தனர். இந்நிலையில் 'வால்டர்' திரைப்படம் மார்ச் 6-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த வாரத்தில் 'ஜிப்ஸி', 'பொன் மாணிக்கவேல்', 'வெல்வெட் நகரம்' உள்ளிட்ட படங்கள் வெளியாவதால் வால்டர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. அதன்படி, மார்ச் 13-ம் தேதி வால்டர் ரிலீஸ் ஆகிறது.
'வால்டர் வெற்றிவேல்' படம் மிகப்பெரிய வெற்றியடையக் காரணம் குழந்தை சென்டிமென்ட். அதேபோல் 'வால்டர்' படத்திலும் அதைவிட ஒரு படி மேலேயே குழந்தை சென்டிமென்ட் இருக்கிறது என்று சிபிராஜ் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago