ஹரிஷ் கல்யாண், தான்யா ஹோப் நடித்த 'தாராள பிரபு' திரைப்படம் மார்ச் 13-ம் தேதி வெளியாகிறது.
ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற படம் இந்திப் படம் ‘விக்கி டோனர்’. ஷூஜித் சர்கார் இயக்கிய இந்தப் படம்தான், ஆயுஷ்மான் குரானா நடித்த முதல் படம். நாயகியாக யாமி கெளதம் நடிக்க, அன்னு கபூர், கம்லேஷ் கில், பூஜா குப்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
ரொமான்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்தப் படம், விந்து தானம் மற்றும் குழந்தைப் பேறின்மை ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், 2012-ம் ஆண்டு ரிலீஸானது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இறுதியாக ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்க, நாயகனாக நடித்தார் ஹரிஷ் கல்யாண். தான்யா ஹோப் நாயகியாக நடிக்க, விவேக் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்துக்கு 'தாராள பிரபு' எனத் தலைப்பு வைக்கப்பட்டது.
» 'மாஸ்டர்' படக்குழுவுக்குப் புகழாரம் சூட்டிய விஜே ரம்யா
» பாரதியாரின் வரிகளுடன் கரோனோ வைரஸை ஒப்பிட்ட அருண்ராஜா காமராஜ்
கிருஷ்ணா மாரிமுத்து இயக்கிய இந்தப் படத்தில் அனிருத், ஷான் ரோல்டன், விவேக் - மெர்வின், மேட்லி ப்ளூஸ், பரத் ஷங்கர், ஊர்கா குழு, கபீர் வாசுகி மற்றும் இன்னோ கங்கா என 8 இசையமைப்பாளர்கள் பணிபுரிந்துள்ளனர்.
படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாரான நிலையில், 'தாராள பிரபு' மார்ச் 13-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் தன் ட்விட்டர் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
43 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago