இயக்குநர் மகேந்திரன் நடித்த கடைசிப் படம்!

By செய்திப்பிரிவு

இயக்குநர் மகேந்திரன் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம்தான் அவர் மறைவதற்கு முன்பு நடித்த கடைசித் திரைப்படம். இப்படத்தில் பிரபுதேவாவுக்கு வில்லனாக அவர் நடித்தார்.

இதுகுறித்து இயக்குநர் ஏ.சி.முகில் செல்லப்பன் கூறியதாவது:

இயக்குநர் மகேந்திரன் இப்படத்தில் நடிக்க இணைந்ததே எங்களுக்கு அளவிளமுடியாத மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், இன்று இப்படத்தினைக் காண அவர் இல்லை. அந்த வேதனையை படக்குழுவினர் ஒவ்வொருவரும் நினைத்து வருந்துகிறோம். படத்தில் பிரபுதேவாவுக்கும், மகேந்திரனுக்கும் இடையே உள்ள காட்சிகள் எல்லோரும் குறிப்பிடும் வண்ணம் அமைத்துள்ளோம். படத்தில் நாயகியாக நடித்துள்ள நிவேதா பெத்துராஜ் பிரபுதேவாவுக்கு மனைவியாக வருகிறார்.

பிரபுதேவா நடிப்பில் காமெடி கலக்காத முதல் த்ரில்லர் கலந்த ஆக்‌ஷன் படமாக இது இருக்கும். டி.இமானின் பின்னணி இசை பெயர் படத்துக்கு தனித்த வாங்கிக்கொடுக்கும். மேலும் இப்படம் வெளிவருகிற இந்தச் சூழலில் சிலை கடத்தல் பிரிவில் பணியாற்றிய காவல்துறை உயர் அதிகாரியான பொன் மாணிக்கவேலைச் சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். அவரது அன்போடு திரைப்படம் வெளியாவது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி!.

இவ்வாறு இயக்குநர் முகில் தெரிவித்தார்.

'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்