ஆர்யா- சுந்தர்.சி நடிப்பில் 'அரண்மனை 3' படப்பிடிப்பு ராஜ்கோட்டில் ஆரம்பமானது. . 30 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான கடைசி 2 படங்களான 'வந்தா ராஜாவாதான் வருவேன்' மற்றும் 'ஆக்ஷன்' ஆகியவை போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனால், மீண்டும் தனது வெற்றிப் பாதைக்கே திரும்பியுள்ளார் சுந்தர்.சி.
சொந்தத் தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் 'அரண்மனை 3' படத்தைத் தயாரித்து, இயக்கி, நடிக்கிறார் சுந்தர்.சி. இதில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். விவேக், யோகி பாபு, சம்பத் குமார், நந்தினி, விச்சு, மனோபாலா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
» சினிமாவில் நடிக்க அம்மாவின் நகைகளை அடகு வைத்தேன்: விஜய் டிவி ரக்ஷன் வெளிப்படை
» ஆணவக் கொலைக்கு எதிரான 'எட்டுத்திக்கும் பற': மார்ச் 6-ம் தேதி வெளியீடு
யு.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சத்யா இசையமைக்கவுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹிப் ஹாப் ஆதிக்கு தன் படத்திலிருந்து விடை கொடுத்துள்ளார் சுந்தர்.சி.
தற்போது 'அரண்மனை 3' படப்பிடிப்பு குஜராத் அருகே ராஜ்கோட் என்ற இடத்தில் வான்கெனர் பேலஸ் எனப்படும் பிரமாண்டமான அரண்மனையில் நடைபெற்று வருகிறது. 30 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
35 mins ago
சினிமா
46 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago