ரெஜினா கதை நாயகியாக நடிக்கும் 'சூர்ப்பனகை': ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு 

By செய்திப்பிரிவு

ரெஜினா கதை நாயகியாக நடிக்கும் 'சூர்ப்பனகை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் ராஜு இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

'கேடி பில்லா கில்லாடி ரங்கா','ராஜதந்திரம்', 'மாநகரம்' ஆகிய படங்களில் நடித்தவர் ரெஜினா. தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். இவர் கதை நாயகியாக நடிக்கும் முதல் படத்தை கார்த்திக் ராஜு இயக்கி வருகிறார்.

'திருடன் போலீஸ்',' உள்குத்து' ஆகிய தமிழ்ப் படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜு. தெலுங்கில் சந்தீப் கிஷன் நடிப்பில் 'நீனு வீடானி நீடானு நேனே' படத்தை இயக்கினார்.

தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நாயகியை மையப்படுத்திய படத்தை இயக்கி வருகிறார். ரெஜினா நடிக்கும் இப்படத்துக்கு 'சூர்ப்பனகை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தன் ட்விட்டர் பக்கத்தில் கார்த்திக் ராஜு வெளியிட்டுள்ளார்.

வெண்ணிலா கிஷோர், அக்‌ஷரா கௌடா ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். சாம் சி.எஸ். இப்படத்துக்கு இசையமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

50 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்