வதந்தியைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை: ப்ரியா பவானி சங்கர்

By செய்திப்பிரிவு

எஸ்.ஜே.சூர்யா உடனான வதந்தியைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று ப்ரியா பவானி சங்கர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

'மான்ஸ்டர்' படத்தைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா - ப்ரியா பவானி சங்கர் இருவருமே 'பொம்மை' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். ராதா மோகன் இயக்கி வரும் இந்தப் படத்தை எஸ்.ஜே.சூர்யாவே தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இருவரும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவியது.

மேலும், சிலர் ப்ரியா பவானி சங்கரிடம் தனது காதலை எஸ்.ஜே.சூர்யா தெரிவித்ததாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்தச் செய்திக்கு ப்ரியா பவானி சங்கர் எனது தோழி என்று ட்விட்டரில் மறுப்பு தெரிவித்திருந்தார். இது பெரும் வைரலாக பரவியது.

ஆனால், இந்தச் செய்தி தொடர்பாக ப்ரியா பவானி சங்கர் எந்தவொரு தகவலையும் தெரிவிக்காமல் இருந்தார். முதன் முறையாக இந்தக் காதல் வதந்தி தொடர்பான கேள்வி ப்ரியா பவானி சங்கர், "அந்த வதந்தியை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதில் பெரிய காமெடி என்னவென்றால், எஸ்.ஜே.சூர்யா டென்ஷனாகி பதில் சொன்னது தான்.

அதனால் தான் அந்த விஷயம் பெரிதாகிவிட்டது. உண்மையில் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. கிசுகிசு வந்தால் என் நண்பர்கள் தான் என்னை ரொம்ப கலாய்ப்பார்கள். கிசுகிசுக்கள் பற்றி என்னோட பெரிய கவலையே என் நண்பர்களை எப்படி சமாளிப்பது என்பது தான்" என்று தெரிவித்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்