நயன்தாராவைக் கிண்டல் செய்யும் தொனியில் கேள்வி எழுப்பிய ரசிகருக்கு, பதிலடிக் கொடுத்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.
'எல்.கே.ஜி' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி நடித்து, இயக்கியுள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'. இந்தப் படத்தை அவருடன் என்.ஜே.சரவணனும் இணைந்து இயக்கியுள்ளார். இதில் நயன்தாரா, மெளலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (பிப்ரவரி 29) வெளியிடப்பட்டது. அம்மன் வேடத்தில் நயன்தாரா இருப்பது போன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்திருந்தனர். மேலும், மே மாதம் வெளியீடு என்று உறுதிப்படுத்தியிருந்தனர்.
'மூக்குத்தி அம்மன்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ஆர்.ஜே.பாலாஜிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்கள் அனைவருக்குமே தனது நன்றியைத் தெரிவித்து வந்தார் ஆர்.ஜே.பாலாஜி. அப்போது அவரது ட்விட்டர் தளத்தை பின்தொடரும் துர்கை ராஜ் என்பர் "யாரு அம்மன் வேடம் போடணும் அப்படிங்கிற கூறுபாடு இல்லாமல் போய்விட்டது" என்று நயன்தாராவை கிண்டல் செய்யும் தொனியில் கேள்வி எழுப்பினார்.
» நான் கொஞ்சம் சோம்பேறி ஆகிவிட்டேன்: நஸ்ரியா
» என் படத்தோல்வியை அம்மா தாங்கிக் கொள்ள மாட்டார்: துல்கர் சல்மான்
அவருக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் ஆர்.ஜே.பாலாஜி, "துர்கை ராஜ்.. உங்கள் பெயரில் இருக்கிற கடவுள் தான் உங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கணும்" என்று தெரிவித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நிஜ கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளுக்கு இடையே நடக்கும் போராட்டமே இந்தப் படத்தின் கதை என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
54 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago