சூர்யா - ஹரி இணையும் 'அருவா': தீபாவளி வெளியீடு

By செய்திப்பிரிவு

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்துக்கு 'அருவா' எனப் பெயரிடப்பட்டு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து, சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்பதில் சிறு குழப்பம் ஏற்பட்டது. முதலில் இயக்குநர் சிவா இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ரஜினியை வைத்து 'அண்ணாத்த' படத்தை இயக்கி வருவதால் சூர்யா படத்தை அவரால் இயக்க முடியாமல் போனது.

இதனால், சூர்யாவின் 39-வது படத்தின் இயக்குநர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இறுதியாக, ஹரி இயக்கப் பேச்சுவார்த்தைத் தொடங்கப்பட்டது. அவர் சொன்ன கதையில் சில மாற்றங்களைச் சொன்னார் சூர்யா. அதை முடித்து ஹரி கூறவே, சூர்யா - ஹரி கூட்டணி இறுதியானது.

இந்தக் கூட்டணியை அப்படியே, தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டார் ஞானவேல்ராஜா. ஏற்கனவே, இந்தக் கூட்டணியை வைத்து படங்கள் தயாரித்துள்ளதால் அவர்களும் உடனடியாக ஒ.கே சொல்லிவிட்டார்கள்.

'அருவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கப்பட்டு, தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். இதன் படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக முடிக்கத் தீர்மானித்துள்ளனர். இதற்குத் தகுந்தாற் போல் சூர்யாவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 6-வது படம் இதுவாகும் என்பது நினைவு கூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

மேலும்